த.வெ.க. மாநாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது

3 months ago 28

விழுப்புரம்,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரியில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் கட்சியைத் தொடங்கினார். மேலும் அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, பல்வேறு தடைகள் ஏற்பட்ட நிலையில், ஒரு வழியாக தற்போது வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.

எனவே, நடிகர் விஜய், தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்கான பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பல்வேறு குழுக்களை அமைத்து மாநாடு பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக மாநாட்டு மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற இந்த பந்தக்கால் நடும் விழாவில் அதிக அளவிலான பெண்கள் கலந்துகொண்டனர். பந்தக்கால் நடும்போது, மாநில மாநாடு வல்லட்டும்..வெல்லட்டும்.. என தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.   

Read Entire Article