த.வெ.க. மாநாடு: தொண்டர்கள் வீசிய கட்சி துண்டை அணிந்த விஜய்

2 months ago 12

விழுப்புரம்,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டியில் த.வெ.க. தொண்டர்கள் குவிந்துள்ளனர். பறையாட்டம், நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. சரியாக நான்கு மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அவரை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் விஜய் நடப்பதற்காக போடப்பட்டுள்ள நடைமேடையில் உற்சாகமாக நடந்து சென்று தொண்டர்களை நோக்கி விஜய் கையசைத்தார். அவரை நோக்கி கட்சித் துண்டுகளை தொண்டர்கள் வீசினர். தொண்டர்கள் வழங்கிய துண்டுகளை விஜய் எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டு நடந்து சென்றார். மாநாட்டில் கூடியிருக்கும் தொண்டர்களின் உற்சாகத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்த விஜய் கண்கலங்கினார்.

Read Entire Article