த.வெ.க. மாநாடு: காவலர் உட்பட 60க்கும் மேற்பட்டோர் மயக்கம்

2 months ago 15

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக காவலர் உட்பட 60க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். மயக்கம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர் . மாநாட்டுத் திடலில் இரண்டு புறங்களிலும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொண்டர்கள் அமைதி காக்கும்படியும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார் . 

Read Entire Article