த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் - சேலத்தில் தொடங்கியது

3 months ago 20

சென்னை,

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு தொடர்பாக மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது . த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது . 

Read Entire Article