டொவினோ தாமஸின் "நரிவேட்டை" டிரெய்லர் வெளியீடு

2 weeks ago 8

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பிருத்விராஜ் இயக்கத்தில் 'எல் 2 எம்புரான்' படத்தில் நடித்துள்ளார்.

அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரி வேட்டை' என்ற படத்தில் டோவினோ தாமஸ்நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் நடிக்கும் முதல் மலையாள படம் இதுவாகும். நரி வேட்டை படத்தில் நடிகர் சேரனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகி வைரலானது. அதன்படி, இப்படத்தில் சேரன் போலீஸ் அதிகாரியாக 'கேசவதாஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் பாடலான 'மின்னல்வாலா' பாடல் சமீபத்தில் வெளியானது. மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. "நரிவேட்டை" படம் மே 16ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

വാക്ക് പാലിക്കുന്നത് ജനാധിപത്യ മര്യാദയാണ്! To break your word is to betray democracy itself! #NARIVETTA Trailer Out Now! https://t.co/1c1W11RtpJ @anurajmanohar @JxBe @CheranDirector #SurajVenjaramoodu pic.twitter.com/l7IITSvBtP

— Tovino Thomas (@ttovino) April 24, 2025
Read Entire Article