டொனால்டு டிரம்பிற்கு ராகுல் காந்தி வாழ்த்து

6 months ago 18

புதுடெல்லி,

அமெரிக்க நாட்டின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப்,வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் , அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் டொனால்ட் டிரம்ப். எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற கமலா ஹாரிஸ்க்கும் வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article