டெஸ்ட் கிரிக்கெட்டில் இது என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் - சுப்மன் கில்

1 week ago 4

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து வில் யங் (71 ரன்), டேரில் மிட்செல் (82 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2ம் நாள் முடிவில் 43.3 ஓவர்களில் 171 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. அஜாஸ் படேல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். நியூசிலாந்து இதுவரை 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 4விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் சதத்தை அடிக்காவிட்டாலும் இந்த 90 ரன்கள் தம்முடைய கேரியரின் ஒரு சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் என்று சுப்மன் கில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "டெஸ்ட் கிரிக்கெட்டில் இது என்னுடைய ஒரு சிறந்த இன்னிங்ஸ். ஸ்பின்னர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அசத்த வேண்டும் என்ற மனநிலையை கொண்டு அவர்களை நாங்கள் அழுத்தத்திற்குள் போட முயற்சித்தோம். நாங்கள் தொடர்ச்சியாக அவர்களை அடித்தால் அவர்களால் சிறப்பாக பந்து வீசுவது கடினமாகும். கடந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாகவே என்னுடைய ஆட்டத்தில் நான் வேலை செய்தேன். இருப்பினும் காயம் காரணமாக நிறைய நேரம் கிடைக்கவில்லை.

புனே போட்டிக்கு முன் நான் பயிற்சிகளை எடுத்தேன். பயிற்சியாளர்களுடன் எம்மாதிரியான பயிற்சிகளை எடுக்க வேண்டும் என்று விவாதித்து செயல்பட்டேன். இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்தது. அதனால் இப்போட்டியில் நான் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறேன். நாட்டுக்காக நீங்கள் விளையாடும்போது மகிழ்ச்சியுடன் விளையாடுவீர்கள். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் சொந்த வழியைக் கொண்டிருப்பார்கள். அதனால் யாரேனும் அட்டாக் செய்யும் ஆட்டம் நமக்கு வேலை செய்யும் என்று நினைத்தால் சேசிங்கில் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

Read Entire Article