டெஸ்ட் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய கேப்டன், துணை கேப்டன் நியமனம்

23 hours ago 2

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜோமல் வாரிக்கன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கிரெய்க் பிராத்வைட் விலகினார். இதனையடுத்து புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு முன்னர் அணியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கேப்டனாக சேஸின் முதல் சோதனை ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

Read Entire Article