டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் ரிஷப் பண்ட், ஆண்டி பிளவரை பின்னுக்கு தள்ளிய ஜேமி சுமித்

4 hours ago 5

பர்மிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.

பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.

இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 271 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஜேமி சுமித் 272 ரன்கள் (184 +88 = 272 ரன்கள்) அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் ரிஷப் பண்ட் , ஆண்டி பிளவர் ஆகியோரை முந்தி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஆண்டி பிளவர் - 341 ரன்கள்

2. ஆண்டி பிளவர் - 287 ரன்கள்

3. ஜேமி சுமித் - 272 ரன்கள்

4. ஆண்டி பிளவர் - 253 ரன்கள்

5. ரிஷப் பண்ட் - 252 ரன்கள் 

Read Entire Article