டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; ஹாரி புரூக் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

3 months ago 21

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 262 ரன்கள் குவித்த ஜோ ரூட் 33 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 932 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் முச்சதம் விளாசி சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்  11 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனுடன் (தலா 829 புள்ளி) பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் ஜெய்ஸ்வால் (792 புள்ளி) 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். விராட்கோலி 7-வது இடம் வகிக்கிறார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 15-வது இடத்துக்கும் (3 இடம் சரிவு), முகமது ரிஸ்வான் 19-வது இடத்துக்கும் (12 இடம் சரிவு)) தள்ளப்பட்டனர்.

Read Entire Article