டெவால்ட் பிரேவிஸை வரவேற்ற சென்னை அணியினர்

3 hours ago 1

மும்பை ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது.சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பை மகேந்திரசிங் தோனி மீண்டும் ஏற்றுள்ளார். தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

நடப்பு சீசனுக்கான சென்னை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெவால்ட் பிரெவிஸ் இன்று சென்னை அணியுடன் இணைந்தார் . அவரை அணி வீரர்கள் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bonding strong, from Day 1!

#MIvCSK #WhistlePodu #Yellove pic.twitter.com/zyKgFZ91gs

— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2025


Read Entire Article