டெல்லி,
தலைநகர் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் மகிபல்பூர் பகுதியில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர் இந்த சோதனையில் 560 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக துஷார் கோயல், ஹிமசு குமார், அவுரங்கசீப் சித்திக், பாரத் குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.