
டெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று திடீரென பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதேபோல் இந்த புயலால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் டெல்லியில் இரவு 9 மணிவரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் சில மணிநேரங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.