
புதுடெல்லி,
பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடியை உமர் அப்துல்லா சந்தித்து பேசியிருப்பது இதுதான் முதல் முறையாகும்.
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அரை மணி நேரமாக நீடித்த இந்த சந்திப்பின் போது ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.