
அகமதாபாத்,
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடந்து வரும் 67வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதி வருகின்றன. அகமதாபாத்தில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டெவால்ட் பிரேவிஸ் 23 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 57 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிரேவிஸ் 19 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
இந்நிலையில், 19 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம் சென்னை அணிக்காக அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் பிரேவிஸ் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4வது வீரராக இணைந்துள்ளார்.
இதற்குமுன் சென்னை அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். 2014ம் ஆண்டு பஞ்சாபிற்கு எதிராக ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதற்கு அடுத்தபடியாக 2022ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக மொயின் அலி 19 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு மும்பைக்கு எதிராக ரஹானே 19 பந்துகளில் அரைசதம் விளாசினார். தற்போது 4வது வீரராக பிரேவிஸ் சென்னை அணிக்காக 19 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.