
புதுடெல்லி,
பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 4 நாட்கள் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் ஏற்பட்டது. அதைதொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்தியமத்திய மந்திரி சபை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா நடத்திய தாக்குதல், எல்லை நிலவரம் குறித்து ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது .