டெல்லி : டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. நவம்பர் மாதத்திற்கான 15.79 டி.எம்.சி. தண்ணீரை திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
The post டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.