டெல்லியில் காற்று மாசை தடுக்க அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை: உச்ச நீதிமன்றம்

6 hours ago 2


டெல்லி: டெல்லியில் காற்று மாசை தடுக்க அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுவின் கட்டுப்பாடுகளான GRAP செயல்திட்டத்தின் 3 மற்றும் 4 வது நிலையானது கடந்த வாரம் முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் 4வது நிலை கட்டுப்பாடுகளை முறையாக டெல்லியில் அமல்படுத்தவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .

உச்சநீதிமன்றத்தில் டெல்லியின் காற்றுமாசு தொடர்பான மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி அபய் ஓகா தலைமையிலான அமர்வானது இந்த வழக்கை இன்று விசாரித்து வந்த நிலையில், அமல்படுத்தப்பட்ட காற்று மாசை தடுக்க அறிவிக்கப்பட்ட 4ஆம் நிலை கட்டுப்பாடுகளை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

வாகன போக்குவரத்தை தடுக்க டெல்லி காவல்துறையும், அரசும் தவறிவிட்டது என்ற குற்றசாட்டையும் முன்வைத்துள்ளனர். டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழையாமல் தடுக்க 113 சாலை எல்லைகளில் மொத்தமுள்ள 13 சாலைகளையும் கடுமையான கண்காணிக்கவும். இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக 13 வழக்கறிஞர்களையும் தற்போது உச்சநீதிமன்றம் நியமித்து உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 8 நாட்களுக்கு முன்னதாக டெல்லியின் காற்று மாசு என்பது மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பது முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் மனுதாரர் சார்பாக இன்று முன்வைக்கப்பட்டது. பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிப்பதும், தடுக்கப்படவில்லை.

அதற்கு அதிகாரிகளும் துணை போகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரத்தில் இஸ்ரோவினுடைய கருத்து என்ன? தெரிவிப்புகள் மூலமாக அதனை கண்காணிப்பது எப்படி என்பது தொடர்பான ஒரு விளக்கத்தையும் நீதிபதிகள் கேட்டு வருகின்றனர். கடந்த வாரம் அமல்படுத்தப்பட உத்தரவின் அடிப்படையில் நடைமுறைகள் என்பது முழுமையாக கடைபிடிக்கப்படாதது ஏன்? என்ற கேள்விக்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிபதிகள் தற்போது பிறப்பித்துள்ளனர்.

காற்றுமாசு தடுப்பு செயல்திட்டத்தினுடைய நிலை 3 மற்றும் நான்கை கட்டுப்படுத்துவதா வேண்டாமா? அதனை நீக்குவதா வேண்டாமா? என்ற தெளிவான முடிவுகள் வரும் 25 ஆம் தேதிக்கு எடுக்கப்படும் என்ற தகவலையும் நீதிபதி தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் பல்வேறு பள்ளி மாணவர்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கருத்தையும் மனுதாரர் தரப்பானது இன்று விசாரணையின் பேரில் முன்வைத்த நிலையில் அனைத்து உத்தரவையும் வரும் திங்கட்கிழமை எடுக்கப்படும்.

அதற்கு முன்னதாக காற்று மாசுவினுடைய செயல்திட்டம் நல்லறிக்கை 4 ஆய்வகத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? வாகனங்களின் செயல்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளதா? காற்று மாசு குறைந்துள்ளதா? என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்காக 13 வழக்கறிஞர்களும் நாளை நேரடியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றும், அதுமட்டுமல்லாமல் சிசிடிவி மூலமான கடந்த 8 நாட்கள் மீதான கண்காணிப்பையும் உறுதி செய்து உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை வழங்கப்பட உள்ளது.

The post டெல்லியில் காற்று மாசை தடுக்க அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை: உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article