டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு

3 months ago 23

டெல்லி: டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டம் எதிரொலியாக டெல்லியில் 163 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. லடாக்கிற்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி சமூக ஆர்வலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வக்ஃப் திருத்த மசோதா, எம்சிடி நிலைக்குழு தேர்தல், டியுஎஸ்யு தேர்தல் முடிவுகள் நிலுவையில் இருப்பதை ஒட்டி 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜ்காட் நோக்கி வந்த சோனம் வாங்சுக், அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு தடுக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளால் டெல்லியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article