சென்னை: விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மல்லக்கோட்டையில் தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இக்குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில் முருகானந்தம் (49) ஆறுமுகம் (50) ஆண்டிச்சாமி (50) கணேசன் (43) வட மாநிலத் தொழிலாளி ஹர்ஜித் ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.