டெல்லிக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் தேவை: பிரதமர் மோடி பேச்சு

2 hours ago 1

டெல்லி: டெல்லிக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. பேரவை தேர்தலையொட்டி டெல்லி துவாரகா பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி; பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள். பின்னர், டெல்லியை ஆம் ஆத்மி கைப்பற்றியது. மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள்.

தற்போது இரட்டை என்ஜின் கொண்ட அரசை உருவாக்கி, டெல்லிக்கு சேவை செய்வதற்காக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தொடர்ந்து பேசிய பிரதமர்; பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் இன்று அவமதித்துள்ளது. ராஜ குடும்பத்தின் ஆணவத்தை நாடு மீண்டும் ஒருமுறை பார்த்துள்ளது. குடியரசு தலைவரின் தாய்மொழி இந்தி இல்லை, இருப்பினும் அவர் தன்னுடைய சிறப்பான உரையை வழங்கினார் என்றும் கூறினார்.

The post டெல்லிக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் தேவை: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article