புதுடெல்லி: ஐபிஎல்லில் 60வது லீக் போட்டியில் நேற்று டெல்லி, குஜராத் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர் ஃபாப் டூப்ளெஸிஸ் 5 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் இணை சேர்ந்து ஆடிய அபிஷேக் பொரெல் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின், ராகுலுடன், கேப்டன் அக்சர் படேல் இணை சேர்ந்தார். இவர்கள் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில், அக்சர் படேல் (25 ரன்) அவுட்டானார்.
அதையடுத்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வந்தார். சிறிது நேரத்தில், ராகுல் சதம் (60 பந்து) கடந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி, 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. இதையடுத்து, களம் இறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தார். இறுதியில் 19 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றிபெற்றது. இறுதிவை ஆட்டமிழக்காமல் சாய் சுதர்சன் 108 ரன்கள், சுப்மன் கில் 93 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து, குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பிளேஆப் தகுதி பெற்றன.
The post டெல்லிக்கு எதிரான போட்டி குஜராத் அபார வெற்றி appeared first on Dinakaran.