புது டெல்லி,
வடக்கு டெல்லியின் நரேலா தொழில்துறை பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர் . வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது இதனால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் சிறிய தீக்காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
இரண்டாவது மாடியில் இருந்து மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.தீக்காயங்களுடன் படுகாயமடைந்த குடும்பத்தினரை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இதில் ராஜூ(40) அவருடைய மனைவி ராஜேஸ்வரி(35) மகன் ராகுல் (18) மற்றும் மூன்று மகள்கள் மோகினி(1`2), வர்ஷா (5), மற்றும் மஹி (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.