![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38585058-7.webp)
புதுடெல்லி,
வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் நாட்டின் தலைநகரான டெல்லி வருபவர்களில் சிலர் போதைப்பொருள் கடத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது. இந்தநிலையில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது.
அதன்பேரில் தீவிர கண்காணிப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டபோது பிரேசில் மற்றும் கென்யாவில் இருந்து சந்தேகத்தை கிளப்பிய நிலையில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து கிடுக்கிப்பிடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களுடைய உடைமைகளுடன் சேர்த்து கொகைன் போதைப்பொருள் கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 2¾ கிலோ எடை கொண்ட கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.40 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது