டெல்லி விமான நிலையத்தில் 26 ஐபோன்களை கடத்தி வந்த பெண் கைது

3 months ago 24

புதுடெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஒரு பெண்ணின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பெண்ணின் பையில் 26 புதிய மாடல் ஐபோன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஐபோன்கள் டிஷ்யூ பேப்பரில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஐபோன்களை கடத்தி கொண்டு வந்த பெண்ணை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு சுமார் 37 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article