டெல்லி: யமுனை ஆற்றில் மிதக்கும் ரசாயன நுரை - பொதுமக்கள் கவலை

3 months ago 21

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. வெள்ளை நிற பனிப்படலம் போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் யமுனை ஆற்றின் நீர், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பா.ஜ.க. கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இது குறித்து பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி கூறுகையில், "டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காற்றும், நதியும் மாசடைந்து விட்டது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியின் நிலையை மாற்றுவதற்கு மக்கள் பா.ஜ.க.விற்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Read Entire Article