![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38222231-aravind-kejriwal.webp)
புதுடெல்லி,
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் மந்திரியுமான கெஜ்ரிவால் போட்டியிட்டார். இதில், தற்போதைய நிலவரப்படி கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜகவின் பர்வேஷ் ஷர்மா முன்னிலை பெற்றுள்ளார்.