டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துகிறது - அரவிந்த் கெஜ்ரிவால்

3 hours ago 1

டெல்லி,

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது,

டெல்லி போலீசை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. டெல்லி போலீசார் அனைவரும் பாஜகவுடன் இருக்கின்றனர். மக்களின் பாதுகாப்பிற்கு யாரும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத்திற்கு இடையூறு செய்ய வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து நேரடியாக உத்தரவு வந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி என்னிடம் கூறியுள்ளார். வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்களோ? என்ற அச்சமும் எனக்கு ஏற்பட்டுள்ளது. பாஜக பிரசாரத்திற்கு தேவையான வசதிகளை போலீசாரே செய்துகொடுக்கின்றனர். ஆம் ஆத்மி பிரசாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பாஜக தொண்டர்களுக்கு போலீசார் ஆதரவு அளித்து வருகின்றனர்' என்றார்.

Read Entire Article