டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட லடாக் சுற்றுச்சூழல் ஆர்வலர் காலவரையற்ற உண்ணாவிரதம்

2 months ago 17

புதுடெல்லி: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கடந்த மாதம் லேயில் இருந்து பாத யாத்திரை தொடங்கினர். காந்தி ஜெயந்தி தினமான நேற்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் யாத்திரையை முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், இவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல், சிங்கு எல்லையில் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை செவ்வாய்க்கிழமை பவனா காவல்நிலையத்தில் கொண்டு வந்து அடைத்து வைத்தனர். வாங்சுக் மற்றும் போராட்டக்காரர்கள் 150 பேர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீண்டும் கைது செய்து பவனா காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்த பிரதிநிதி கூறுகையில், ‘‘சோனம் வாங்சுக், இன்னும் காவலில் தான் இருக்கிறார். அவரிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. வாங்சுக் உள்ளிட்டவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.

The post டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட லடாக் சுற்றுச்சூழல் ஆர்வலர் காலவரையற்ற உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Read Entire Article