நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: பரபரப்பு ஆடியோ வைரல்

3 hours ago 3

நாகர்கோவில்: நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (38). இவர் தமிழ்நாடு நீதித்துறையில் தூய்மை பணியாளராக பணிக்கு சேர்ந்து, அலுவலக உதவியாளராக உயர்ந்தார். கடந்த 1 வருடமாக குமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் பணியில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இவர் வட்டக்கரையில் உள்ள தனது வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நேசமணிநகர் போலீசார் விசாரித்தனர். நாகராஜனின் மனைவி உமா மகேஸ்வரி (29), அளித்த புகாரி ல் கடந்த 4 மாதங்களாக பணியிடத்தில் கணவர் நாகராஜனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். ஜாதியை சொல்லி திட்டுவதாகவும் கூறி அவர் வேதனையில் இருந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் முறையாக தகவல் கொடுத்து விடுப்பு எடுத்துள்ளார்.

ஆனாலும் அவரிடம் போனில் பேசி சஸ்பெண்ட் செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் மன அழுத்தம் அதிகரித்து தூக்கு போட்டு இறந்துள்ளார் என கூறி உள்ளார். இதன் பேரில் நேசமணிநகர் போலீசார் தற்போது பி.என்.எஸ். 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே நாகராஜன் பேசியதாக ஆடியோக்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: பரபரப்பு ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article