டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 12-ம் வகுப்பு மாணவர் கைது

4 hours ago 3

புதுடெல்லி,

கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் புரளி எனக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே நேற்று டெல்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், பள்ளி வளாகங்களில் பல்வேறு இடங்களில் பயங்கரமான வெடிகுண்டு இருப்பதாகவும், தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் இருப்பர்; மற்ற ஆசிரியர்களும் அதிகாரிகளும் பள்ளியைச் சுற்றி வருவர் என்பதாலும் இழப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு, மின்னஞ்சலில் பெறப்பட்ட அச்சுறுத்தல் புரளி எனத் தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் அனுப்பியவருக்கு பள்ளிகளில் தேர்வு அட்டவணை குறித்தும், ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்திருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. மேலும், இ-மெயில் குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல் அனுப்பியது 12 ஆம் வகுப்பு மாணவர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article