டெல்லி: சொகுசு கார் மோதி விபத்து - 14 வயது சிறுவன் கவலைக்கிடம்

4 months ago 16

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி அருகே கிரேட்டர் நொய்டா பகுதியில் நேற்று அதிகாலை 6 மணியளவில் சாலையில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி 14 வயது சிறுவன் படுகாயமடைந்தார். காரை ஓட்டி சென்ற நபர், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பி சென்றார்.

காயமடைந்த மாணவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காரின் டிரைவரை கைது செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

Read Entire Article