டெல்லி சட்டசபை தேர்தல்; ரூ.20 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

4 hours ago 1

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, இந்த விதிகளை மீறியதற்காக, கடந்த 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலான நாட்களில் 504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

17,879 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதிக அளவிலான சட்டவிரோத மதுபானம், உரிமம் இல்லாத ஆயுதங்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்படி, 270 உரிமம் இல்லாத ஆயுதங்கள், 44,256 லிட்டர் மதுபானம் (ரூ.1.3 கோடி மதிப்புடைய) மற்றும் ரூ.4.56 கோடி பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதுதவிர, ரூ.20 கோடி மதிப்பிலான 110.53 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட ஊசிகள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Read Entire Article