டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. 3 மணி நிலவரப்படி வெற்றி-19, முன்னிலை-28

3 months ago 14

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன.

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. இது அக்கட்சியினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 3 மணியளவில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 19 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 28 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று, ஆம் ஆத்மி கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Read Entire Article