டெல்லி சட்டசபை தேர்தல் - ஜனநாயக கடமையாற்றினார் ராகுல் காந்தி

3 hours ago 1

புதுடெல்லி,

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் . இந்த நிலையில் , காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது வாக்களித்துள்ளார் . நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியி அவர் ஜனநாயக கடமையாற்றினார் . 

Read Entire Article