புதுடெல்லி: டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளியே புறநோயாளிகள் தங்கியிருக்கும் பகுதியை காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.. அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், ‘நோயின் பாதிப்பு, கடுமையான குளிரில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒன்றிய, டெல்லி அரசுகள் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளன. எய்ம்சுக்கு வெளியே நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் அவர்கள் படுத்து தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒன்றிய அரசும், டெல்லி அரசும் பொதுமக்களுக்கான தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முற்றிலும் தவறிவிட்டன’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
The post டெல்லி எய்ம்சில் வீதியில் நோயாளிகள் இரக்கமே இல்லையா? ராகுல்காந்தி கேள்வி appeared first on Dinakaran.