புதுடெல்லி: டெல்லி மற்றும் அதன் தலைநகர் பிராந்தியத்தில்(என்சிஆர்) குளிர்காலங்களில் காற்றின் மாசுபாடு அதிகமாக இருக்கும். மாசு குறைபாட்டுக்கு பட்டாசுகள் வெடிப்பதும் ஒரு காரணம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்த அறிக்கையின்படி பட்டாசுகள் உற்பத்தி,சேமித்து வைப்பது மற்றும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்ட தடையை விலக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜால் புயன் அடங்கிய அமர்வு, மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் தெருக்களில் பணிபுரிகின்றனர். காற்று மாசுபாட்டினால் அவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
ஒவ்வொருவரும் அவர்களுடைய வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ காற்று சுத்திகரிப்பானை வாங்கி வைப்பதற்கான வசதியும் இல்லை. அரசியல் சட்டம் பிரிவு 21ன்படி சுகாதாரத்துக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மாசுபாடு அற்ற நிலையில் வாழ்வதற்கான உரிமை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பட்டாசுகள் மீதான தடையில் தளர்வு அளிக்க முடியாது என்று கூறினர்.
The post டெல்லி- என்சிஆர் பகுதிகளில் பட்டாசுகள் மீதான தடைகளை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.