டெல்லி அணிக்கு எதிரான போட்டி கொல்கத்தா வெற்றி

3 hours ago 3

டெல்லி: ஐபிஎல் 18வது தொடரின் 48வது லீக் போட்டி, டெல்லியில் நேற்று நடந்தது. இதில், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கொல்கத்தா அணியில் துவக்க வீரர்களாக சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். மிட்செல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவருக்குள் 48 ரன் குவித்திருந்த நிலையில், அந்த ஓவரின் கடைசி பந்தில் குர்பாஸ் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின், நரைனுடன், கேப்டன் அஜிங்கிய ரகானே இணை சேர்ந்தார். 3.4 ஓவரில் கொல்கத்தா, 50 ரன்னை எட்டி நிலையில், சுனில் நரைன் 27 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து, ரகானே 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் வெளியேறினர். பின்னர், ரகுவன்ஷியுடன், ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இவர்கள் பொறுப்பாகவும் நிதானமாகவும் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த இணை, 44 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரகுவன்ஷி 44 ரன்னில் (32 பந்து) ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரிங்கு சிங் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆண்ட்ரூ ரஸல், ரோமேன் பாவல் களத்துக்கு வந்தனர். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில், பாவல் அவுட்டானார்.

அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் அனுகுல் ராய் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ரஸல் 17 ரன்னில் ரன் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு, 204 ரன் குவித்தது. வருண் சக்ரவர்த்தி 1 ரன், ஹர்சித் ராணா ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில், மிட்செல் ஸ்டார்க் 3, விப்ரஜ் நிகாம், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் துவக்க வீரர்களாக அபிஷேக் போரல், டுபிளெசிஸ் களமிறங்கினர்.

போரல் 4 ரன்னில் அவுட்டனார். அடுத்து கருண் நாயர் வந்தார். டுபிளெசிஸ் அதிரடியாக விளையாடி நிலையில், கருண் நாயர் 15 ரன்னிலும், கே.எல் ராகுல் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 60 ரன்னுக்கு 3 விக்கெட் எடுத்து டெல்லி அணி தடுமாறியது. அடுத்த வந்த கேப்டன் அக்சர் பட்டேல், டுபிளெசிஸ்சுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 76 ரன் சேர்த்த நிலையில், அக்சர் பட்டேல் 43 ரன்னில் (23 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்னிலும், டுபிளெசிஸ் 62 ரன்னிலும் (45 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அசுதோஷ் சர்மா 7 ரன்னிலும், மிச்செல் ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய விப்ராஜ் 38 ரன்னில் (19 பந்து, 2 சிக்சர், 5 பவுண்டரி) வெளியேற 20 ஓவரில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 14 ரன்னில் தோல்வியடைந்தது. சமீரா 2 ரன், குல்தீப் யாதவ் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் சுனில் நரைன் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்தனர்.

The post டெல்லி அணிக்கு எதிரான போட்டி கொல்கத்தா வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article