டெபாசிட் செய்த பணம் வங்கி கணக்கில் வராததால் ஆத்திரம்... ஏடிஎம் எந்திரத்தை உடைத்த இளைஞர்

4 months ago 27

சென்னை,

தனியார் ஏடிஎம் மையத்தில் டெபாசிட் செய்த பணம் வங்கி கணக்கில் வராததால், ஆத்திரத்தில் ஏடிஎம் எந்திரத்தை கல்லால் அடித்து உடைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் தனது மனைவி வங்கி கணக்கில் 5 ஆயிரத்து 500 ரூபாயை டெபாசிட் செய்துள்ளார்.

அப்போது பணம் டெபாசிட் செய்ததற்கான ரசீது வந்த நிலையில்,மனைவியின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான எந்த குறுந்தகவலும் வரவில்லை. பணம் வங்கி கணக்குக்கு வராததால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியை தொடர்பு கொண்ட சாகுல் ஹமீது புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இரண்டு மாதங்களாக தனியார் வங்கி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அவர், அந்த ஏடிஎம் எந்திரத்தை செங்கல்லால் அடித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சாகுல் ஹமீதை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் எந்திரத்தை சேதப்படுத்தினால்தான் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால் இவ்வாறு செய்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Read Entire Article