ஒடென்ஸ்,
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் (ரவுண்ட் ஆப் 32) ஒன்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் லூ குயாங் சூவை சந்தித்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-12 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய லக்சயா சென், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 19-21, 14-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதன் மூலம் லூ குயாங் சூ 12-21, 21-19, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் லக்சயா சென்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட லக்சயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.