டூவீலர்கள் மோதி வாலிபர் பலி ஒருவர் படுகாயம்

3 months ago 19

நாமகிரிப்பேட்டை, அக்.11: ராசிபுரம் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (29). இவர் டூவீலரில் ஏடிசி டிப்போவில் இருந்து, பட்டணத்தை நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக ராசிபுரத்தில் இருந்து, ஏடிசி டிப்போ நோக்கி சென்ற தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த சுகுமாரன் என்பவரது டூவீலரும், பூபாலனின் டூவீலரும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில், படுகாயமடைந்த பூபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுகுமாரன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார், பூபாலனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதி வாலிபர் பலி ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article