பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள உலகம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பூஞ்சோலை(36). இவர்களது மகள் ரஞ்சிதா(17), மகன் ராஜீவ்(9). இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பூஞ்சோலை தனது மகள், மகனுடன் டூ வீலரில் பொன்னமராவதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். டூவீலரை பூஞ்சோலை ஓட்டினார். அப்போது இரவு 8.30 மணியளவில் கேசராபட்டியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக டூவீலரின் முன்பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பூஞ்சோலை டூவீலரை நிறுத்தி இறங்க முயன்றபோது அவரும், மகளும் கீழே விழுந்தனர். இதில் மகன் மட்டும் டூவீலரின் முன் பகுதியில் மாட்டிக்கொண்டான். அதற்குள் டூவீலர் முழுவதும் தீ மளமளவென பரவியதில் ராஜீவ் மீது தீப்பிடித்து படுகாயமடைந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் சிகிச்சை பலனின்றி பலியானான். தாய், சகோதரி சிகிச்சைக்கு பின்னர் நேற்று வீடு திரும்பினர்.
The post டூவீலர் தீப்பிடித்து சிறுவன் கருகி சாவு: தாய், சகோதரி காயம் appeared first on Dinakaran.