'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்கு 'யு' தணிக்கை சான்றிதழ்

3 hours ago 1

சென்னை,

'அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களையடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. இந்த படத்தை 'குட் நைட்' படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானது. அதில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார் சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு' தணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளது. இது குறித்த பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது.

#TouristFamily - Censored with Clean "U" Certificate Bring your families and enjoy this WHOLESOME ENTERTAINER ❤️Grand Release in Theatres Worldwide on MAY 1st Written & directed by @abishanjeevinth ✨A @RSeanRoldan musical @sasikumardir @SimranbaggaOffcpic.twitter.com/LuZOmezHYx

— Million Dollar Studios (@MillionOffl) April 28, 2025
Read Entire Article