"டூரிஸ்ட் பேமிலி" பட இயக்குநரை பாராட்டிய நடிகர் சூர்யா

7 hours ago 4

சென்னை,

அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந்த், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படம் மூன்றாவது வாரத்தை கடந்துள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் இப்படம் இன்றுவரையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமலி' திரைப்படம் ஜப்பானில் நாளை வெளியாகிறது. இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமவுலி ஆகியோரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து, நடிகர் சூர்யாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் அபிஷன் பதிவிட்டுள்ளார். அதில், 'எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை, ஆனால் இன்று என்னுள் ஏதோவொன்று குணமாகியது' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

'டூரிஸ்ட் பேமிலி' மற்றும் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான 'ரெட்ரோ' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின.

Overwhelmed by the love pouring in for our #TouristFamily !!This one's truly special ✨Grateful to favourite @Suriya_offl sir for watching the film and sharing such heartfelt words ❤️Your thoughtful insights reflect a deep, genuine love for cinema, thank you..Written &… pic.twitter.com/vBV0MWl1aj

— Million Dollar Studios (@MillionOffl) May 23, 2025
Read Entire Article