மேம்படுத்தப்பட்ட புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் புல் திராட்டில் மோட்டார் சைக்கிள் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 803 சிசி எல் – டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது இது அதிகபட்சமாக 8,250 ஆர்பிஎம்-ல் 73 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 65.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், இருபுறமும் இயக்கக் கூடிய குயிக் ஷிப்டர் இடம் பெற்றுள்ளது.
முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனா ஷாக் அம்சர்வர்கள், டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. பைரலி எம்டி60 டயர் பொருத்தப்பட்டுள்ளது. 4.3 அங்குல டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. ரோடு, ஸ்போர்ட் என டிரைவிங் மோட்கள் உள்ளன. ரைடுபை வயர் தொழில்நுட்பம், கார்னரிஸ் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.12.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் appeared first on Dinakaran.