டுகாட்டி நிறுவனம் பனிகலே வி4 பந்தய மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில், டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் வி4 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 13,500 ஆர்பிஎம்-ல் 214 பிஎச்பி பவரையும், 11,250 ஆர்பிஎம்-ல் 120 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் குவிக் ஷிப்டர் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளது. 6.9 அங்குல டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. இதில், வி4, வி4 எஸ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. வி4 வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ₹30 லட்சம். எஸ் வேரியண்ட் சுமார் ரூ.36.5 லட்சம்.
The post டுகாட்டி மோட்டார் சைக்கிள் appeared first on Dinakaran.