'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரெய்லர் வெளியானது

2 weeks ago 3

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உருவாகி உள்ளது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகின்ற மே மாதம் 16ம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை பிரபல நடிகர்களான விஷால், சிம்பு மற்றும் கார்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Big cheers to @iamsanthanam and the entire team on the grand trailer launch!Looks super fun and exciting — wishing you all a massive success!Can't wait to catch it on the big screen!YT Link : https://t.co/58ylg4khZ0#DevilsDoubleNextLevelFromMay16 #DhillukuDhuddupic.twitter.com/KtVQ6J9D6M

— Silambarasan TR (@SilambarasanTR_) April 30, 2025
Read Entire Article