'டிடி நெக்ஸ்ட் லெவல்': தடை கோரிய மனு - கோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு

21 hours ago 1

சென்னை,

சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' உருவாகி உள்ளது.

நடிகர் ஆர்யா மற்றும் நிகாரிகா எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகின்ற 16ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய படங்களின் தலைப்பை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி ஆர்.கே எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன உரிமையாளர் ரமேஷ் குமார் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தநிலையில், நிகாரிகா எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் நடிகர் ஆர்யா பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Entire Article