டிஜிட்டல் யுகத்தில் குடிமக்களைப் பாதுகாக்கும் இணையவழி குற்ற தடுப்புபிரிவு!!

3 hours ago 3

சென்னை :தமிழ்நாடு காவல்துறை சைபர்கிரைம் பிரிவு (CCW) என்பது மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் சைபர்குற்றங்களின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கென உருவாக்கப்பட்ட ஒரு பிரிவாகும். கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களின் தலைமையிலான சைபர்கிரைம் பிரிவு ஒரு வலுவான உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உலகில் குடிமக்களைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள சைபர்கிரைம் பிரிவின் தலைமையகம் மூன்று பிரிவுகளைக்கொண்டுள்ளது.

1 மாநில சைபர் கட்டளை மையம் (SCCC): 24×7 1930 சைபர்கிரைம் உதவி எண்ணை நிர்வகிக்கிறது. சைபர் குற்றவாளிகளில் ஈடுபடும் சிம்கார்டுகள் மற்றும் IMEI களளை முடக்குவது மற்றும் சட்டவிரோத வலைத்தளங்கள். URLகள் மற்றும் சமூகஊடக கணக்குகளைத் தடுக்கும் நடவடிக்கைகளைக் கையாளுகிறது.

2. மாநில சைபர்கிரைம் விசாரணை மையம் (SCCIC) குறிப்பிடத்தக்க சைபர்கிரைம் வழக்குகளை விசாரிப்பதில் கவனம் செலுத்துகிறது மற்றும் சைபர்கிரைம் விசாரணைகளை மேற்பார்வை செய்கிறது.

3. சைபர் அரங்கம்: பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுகிறது. சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. மற்றும் இன்டர்ன் ஷிப் மற்றும் சைபர் தன்னார்வலர்கள் மூலம் சைபர்கிரைம் தடுப்புகளை வளர்க்கிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், நகரங்களிலும் மொத்தம், 54 சைபர்கிரைம் காவல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் இப்போது பிரத்யேக சைபர் உதவி அதிகாரி உள்ளனர், இது சைபர்கிரைம் சம்பவங்களைத் தீர்ப்பதில் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் தடையற்ற உதவியை உறுதிசெய்கிறது.

2024 இல் சைபர்கிரைம் பிரிவின் சாதனைகள்

• முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, தேசிய சைபர்கிரைம் ஹெல்ப்லைன் 1930 அழைப்பு மையம் 38 இருக்கைகளுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

• சைபர்கிரைம் பிரிவு, தலைமையகத்தில் உள்ள 1930 சைபர்கிரைம் உதவி எண் கட்டுப்பாட்டு அறைக்கு 2,68,875 அழைப்புகள் வந்துள்ளன. இதில் நிதிமோசடி குறித்து 34,392 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

• பதிவு செய்யப்பட்ட 1,27,065 தேசிய சைபர்கிரைம் அறிக்கையிடல் போர்டல் புகார்களில் 4,326 முதல் தகவல் அறிக்கைகளும் மற்றும் 79,449 சி எஸ் ஆர் களும் வழங்கப்பட்டுள்ளன. சைபர்மோசடிகளால் மக்கள் இழந்த மொத்தம் ₹1673.85 கோடிகலில் *77198 கோடிகள் முடக்கப்பட்டும், 83.34 கோடிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

• 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 838 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், 34 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

• சைபர் ரோந்து குழு: ஆன் லைன் தளங்களை முன் கூட்டியே கண்காணிக்கவும், சைபர் அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு தடுக்கவும் ஒரு பிரத்யேக சைபர் ரோந்து குழு நிறுவப்பட்டுள்ளது. ஏமாற்றும் முழுத்திரை விழிப்பூட்டல்கள் மற்றும் சட்டவிரோத கட்டணக் கோரிக்கைகள் மூலம் மக்களைச் சுரண்டும் மோசடியான NCRP இணைய தளத்தை சைபர் ரோந்துக் குழு விரைவாகக் கண்டறிந்து அகற்றியது இதில் குறிப்பிடத்தக்கது.

மோசடியான சிம்கார்டுகள் மற்றும் வலைத்தளங்களைத் தடுப்பது:

• 2024ம் ஆண்டில் மட்டும் சுமார் 19,359 சிம்கார்டுகள் மற்றும் 54 இணையதளங்கள். 390 யூடியூப் வீடியோக்கள், 922 முகநூல் பதிவுகள் மற்றும் 64 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் உட்பட บง மோசடி தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
• போலி கடன் செயலிகள் (Loan Apps) மற்றும் சூதாட்ட இணைய தளங்கள் திறம்பட அகற்றப்பட்டன.
•பள்ளிகளில் 972 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், கல்லூரிகளில் 856 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பொது இடங்களில் 5,878 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
•சைபர் தடயவியல் ஆய்வகம்: சைபர் குற்ற விசாரணை திறன்களை கணிசமாக உயர்த்தும் வகையில், சைபர் கிரைம் பிரிவு திறம்மிக்க தடயவியல் கருவிகளை வாங்கி சென்னை CCW தலைமையகத்தில் மேம்பட்ட சைபர் ஆய்வகத்தை நிறுவியுள்ளது.
•மொபைல் ஃபோன் மீட்பு: CEIR என்பது தொலைந்த மொபைல் போன்கள் பற்றிய புகார்களை பதிவு செய்வதற்கான ஒரு போர்டல் ஆகும். இதில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் 79,748 IMEI கள் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் 46,185 மொபைல் போன்கள் கண்டறியப்பட்டு 16.296 சாதனங்கள் மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
•ஆபரேஷன் “திரை நீக்கு” டிசம்பர் 6 முதல் 8, 2024 வரை மாநிலம் தழுவிய சிறப்பு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 76 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

மாபெரும் நிகழ்வு: சைபர் வாக்கத்தான்:

சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும். இணைய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும், சைபர்கிரைம் பிரிவு 29 ஜனவரி 2025 அன்று “1930 சைபர் வாக்கத்தான்” நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட நிகழ்வு மாண்புமிகு துணைமுதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் VP சிங்சிலையில் தொடங்கி போர் நினைவிடத்தில் முடிவடைய உள்ளது.

பொது மக்களுக்கான அறிவுரை:

1. அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் அல்லது வாடிக்கையாளர் சேவை சேனல்கள் மூலம் எப்போதும் விளம்பரச் சலுகைகளை சரிபார்க்கவும்.
2. பொது நபர்கள் அல்லது நிறுவனங்களிடமிருந்து வரும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
3. தெரியாத அல்லது நம்பத்தகாத மூலங்களிலிருந்து வரும் இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள், குறிப்பாக SMS அல்லது WhatsApp மூலம் பகிரப்பட்டவை.
4. தீங்கிழைக்கும் இணைப்புகளைக் கண்டறிந்து தடுக்க உங்கள் சாதனங்களில் வைரஸ் தடுப்பு மற்றும் ஃபிஷிங் எதிர்ப்பு மென் பொருட்களை நிறுவவும்.
5. தெரியாத இணைய தளங்கள் அல்லது இணைப்புகள் மூலம் தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களை வழங்குவதைத் தவிர்க்கவும்.
6. ஃபிஷிங் செய்திகள் மேலும் பரவுவதைத் தடுக்க, போலீஸ் அதிகாரிகள் அல்லது சேவை வழங்குநர்களிடம் புகாரளிக்கவும்.

புகார் அளிக்க

நீங்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் புகாரைப் பதிவு செய்யவும்

The post டிஜிட்டல் யுகத்தில் குடிமக்களைப் பாதுகாக்கும் இணையவழி குற்ற தடுப்புபிரிவு!! appeared first on Dinakaran.

Read Entire Article