டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இனி சுலபம்!

3 months ago 20

ஒவ்வொரு நாளும் யுபிஐ மூலமாக பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் செல்போன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிமையாக செய்கின்றனர். பலர் கைகளில் பணமே இல்லாமல் அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறிவிட்டன. சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, யுபிஐ செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், யுபிஐ மூலம் தற்போது 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பும் வசதி அறிமுகமாகியுள்ளது. இந்த வசதி நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இதற்கான மறைமுகக் கட்டணங்களும் நாளைடைவில் குறையும் எனக் கூறப்படுகிறது.

 

The post டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இனி சுலபம்! appeared first on Dinakaran.

Read Entire Article